நீலகிரி மாவட்டம், கூடலூர் மகளிர் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த காப்பி தோட்டத்தில் 3 புலிகள் நடமாடிய காட்சி சிசிடிவியில் பதிவாகி பொதுமக்களை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளது. அப்போது புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் புலிகள் உலா வரும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது கூடலூர் பகுதியானது, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டி உள்ளதால், வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வழக்கம்.

இந்த நிலையில் கூடலூர் பாத்திமா மகளிர் பள்ளி வளாகத்தில் 3 புலிகள் இரவு வேலையில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இங்கு அதிக அளவில் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக இருக்கும் நிலையில் கூடலூர் அருகேயுள்ள பாத்திமா மகளிர் பள்ளி வளாகத்திற்கு அருகேயாள்ள காப்பி தோட்டத்தில் 3 புலிகள் இரவு நேரத்தில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

பள்ளி வளாகத்திற்கு அருகே புலிகள் நடமாடியது. அப்போது அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதனால் புலிகள் நடமாட்டம் காணப்பட்டு பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஏற்ப்படுத்தி உள்ள நிலையில் வனத்துறையினர் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவையை தவிர்த்து பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், யாரேனும் புலிகள் நடமாட்டத்தை பார்த்தால் உடனே வனத்துறைக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.