முன்னாள் அமைச்சர் சுதாரம் மறைவு ; மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

2 Min Read
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அஞ்சலி.உடல்நலம் குறைவால் இன்று பிற்பகல் க.சுந்தரம் உயிரிழந்த நிலையில், மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, ஆர்.காந்தி, டிஆர் பாலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -
Ad imageAd image

கருணாநிதி அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 2 முறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் க.சுந்தரம்.

ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் கழக துணை பொதுச்செயலாளர், உயர் மட்ட செயற்குழு உறுப்பினர், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம்.

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார். அவருக்கு திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கருணாநிதியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த க.சுந்தரம்,, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சரவையில் பணியாற்றியவர் என்பதால் பழைய நினைவுகளையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்..

முதல்வருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, ஆர்.காந்தி, டிஆர் பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Share This Article

Leave a Reply