- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
- அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 28க்கு தள்ளிவைப்பு.
- குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சி விசாரணை துவங்கி விட்டதாக அமலாக்க துறை தகவல்..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்க துறையால் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், சாட்சி விசாரணை துவங்கி விட்டதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் இரு முறை மனுதாக்கல் செய்தபோதிலும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதி நம்பிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. இவ்வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், முதன்மை அமர்வு நீதிமன்றம் சாட்சி விசாரணையை தொடரலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.