முன்னாள் டிஜிபி 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி?

2 Min Read
சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்

உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

2021 பிப்ரவரியில் அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த தாஸ், பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவரும் அந்த அதிகாரியும் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. , தேர்தல் பிரச்சாரத்தின் போது.

அவர் மீது தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2002ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மூத்த அதிகாரி மீது புகார் அளிக்க சென்னைக்கு சென்ற பெண் போலீஸ் அதிகாரியை தடுத்து நிறுத்தியதற்காக அப்போதைய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​70க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்

மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் வாதாடுவதற்கு இறுதி கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தரப்பு கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.மேல்முறையிட்டு வழக்கில் வரும் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.அதனை தொடர்ந்து ராஜேஷ்தாஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முறையீடு செய்தது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விழுப்புரம் நீதி மன்றமே விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply