தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கவர்னர் தேவையற்ற அரசியலைப் பேசி பெரும் சலசலப்பை உருவாக்குகிறார். என்று சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில்,
உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டின் முதல்வர் வெளிநாட்டு பயணத்தை குறை கூறியுள்ளார்.
2019 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் மீது வைத்திருந்த விமர்சனத்தை பிரதமர் மோடி மீதும் ஆளுநர் வைப்பாரா?
தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் ஆளுநர். இந்த செயல் மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. தினந்தோறும் தேவையற்ற அரசியலைப் பேசி தமிழ்நாட்டில் தேவையற்ற சலசலப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.