10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாதை கேட்ட தாழ்த்தப்பட்ட பெண்களை தாக்கியதோடு அவர்களது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற திமுக பஞ்சாய்த்து தலைவர். சமூக வலைதளைங்களில் பரவும் சிசிடிவி காட்சிகள்.
ஈரோடு மாவட்டம், பூந்துறை சேமூர் பஞ்சாய்த்து தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன். இதேபகுதியில் மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வரும் மணிகண்டன் வசித்து வருகிறார்.
இவர் குடியிருக்கும் பகுதிகளில் சுமார் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதால் மணிகண்டனின் தாயார் மற்றும் அவரது மனைவி பூந்துறை சேமூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

அப்போது அங்கு இருந்த திமுக பஞ்சாய்த்து தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தாழ்த்தப்பட்ட மக்கள் அலுவலகம் வந்து புகார் தெரிவிக்கிறீஆர்களா என கூறி புகார் தெரிவித்த பெண்களை தாக்கி உள்ளார்.
இது குறித்து தகவலறிந்த வந்த மணிகண்டன் பஞ்சாய்த்து தலைவரிடம் குடிநீர் வழங்கப்படாததை கேட்ட பெண்கள் தாக்கியது குறித்து கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பஞ்சாய்த்து தலைவர் மணிகண்டனை தாக்கியதுடன் தனது காரிலிருந்த துப்பாக்கியை எடுத்து,

அரசு ஊழியாரான மணிகண்டனை சுட முயன்றுள்ளார். துப்பாக்கி கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சுதாரித்து தங்க தமிழ்ச்செல்வனிடமிருந்த துப்பாக்கி பறித்து உயிரை தற்காத்துகொண்டனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.
அதில் படுகாயமடைந்த மணிகண்டன் அரச்சலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து விட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அரச்சலூர் காவல்துறையினர் திமுக பஞ்சாய்த்து தலைவர் மீது புகார் என்பதால் புகார் தெரிவித்து 3 நாட்களியும் திமுக பஞ்சாய்த்து தலைவர் மீது நடவடிக்கையோ, துப்பாக்கிற்கு லைசன்ஸ் இருக்கின்றனவா என்பது குறித்து கூட இதுவரை விசாரிக்காமல்,
மணிகண்டனை சமாதானமாக செல்லும்படி காவல்துறையினர் வற்புறுத்தினர். பஞ்சாயத்தின் சார்பில் குடிநீர் வழங்காததால் பஞ்சாயத்து அலுவலகத்தில் கேட்க சென்ற பெண்களை தாக்கியதுடன்,

தாழ்த்தப்பட்டவர்கள் அலுவலகம் வந்தார்கள் என்பதால் தாக்கப்பட்டதும், தட்டிக்கேட்ட மகனை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Leave a Reply
You must be logged in to post a comment.