அதிமுக கட்சியின் பொதுச்செயலலாளர் தாம்தான் என்பதனை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது .
அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது செயல்பட்டு வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
மேலும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு 10-ந்தேதி (இன்று) நீதிபதி பிரதீப்பா எம்.சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.