தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை.

2 Min Read
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

அரசு மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் மணல்கள் கொள்ளையடிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகம் மற்றும் மணல் குவாரிகளில், கடந்த மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

- Advertisement -
Ad imageAd image

ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படையினர் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டனர் . மணல் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல்கள் எடுக்கப்பட்டுள்ளதா, முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதனை கண்ட அறிய ட்ரோன் இயக்கி ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் முயற்சித்தனர்.

துரதிஷ்டவசமாக அப்போது பெரும்பான்மையான இடங்களில் , திடீரென காற்று வீசியதுடன் லேசாக மழை பெய்ய துவங்கியதால், ட்ரோனை பறக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆய்வுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தவதில் தொய்வு ஏற்பட்டது மேலும் சோதனையை பாதியிலேயே கைவிட்டு கிளம்பி சென்றனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மருவூர், கோவிலடி உள்ளிட்ட அரசு மணல் குவாரிகளில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தாங்கள் பாதியில் கைவிட்டு சென்ற ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் 12-ஆம் தேதி இந்த இரண்டு மணல் குவாரியின் அலுவலகமானது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் உள்ள மணல் கிடங்கு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என மூன்று குவாரிகளின் ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், போலி ஆவணங்களை வைத்து, அரசு அனுமதித்த அளவை மீறி மணல் அள்ளப்பட்டு அரசுக்கு இழப்பீடு செய்யப்பட்டதாக கூறி விசாரணை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

தற்போது வரை கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இரண்டு மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று 6 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் நீர்வளத்துறை அதிகாரிகள், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.

Share This Article

Leave a Reply