செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை வழக்கு : வாங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசராணை .!

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்

 

- Advertisement -
Ad imageAd image

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுப் பதிவு கடந்த ஆக.8-ம் தேதி பதிவு செய்யப்பட்ட நிலையில் சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

ஒரு ஆண்டுக்கு பிறகு கடந்த 8 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் சாட்சிகளின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது. வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் கடந்த வாரம் சாட்சியம் அளித்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/horrific-incident-at-periyapalayam-in-tiruvallur-district-as-youth-stabbed-a-teenaged-girls-mom-while-she-was-alone-at-home/

அவரிடன் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார் . செந்தில் பாலாஜி, மற்றும் அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சி கூண்டில் நின்றவாறு ஹரிஷ்குமார் பதிலளித்தார்.

வங்கியின் ஆவணங்கள், கவரிங் லெட்டர் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணையின் கேட்கபட்டது.

குறுக்கு விசாரணை இன்று நிறைவடையவில்லை என்பதால் வழக்கை வரும் 28 தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/cans-filled-with-petrol-found-near-the-house-of-the-dmk-union-leader-near-senkunram-what-is-the-background/

இதனிடையே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 56 வது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.

Share This Article

Leave a Reply