திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக மீஞ்சூரில் பிரசார தெருமுனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது;-
அப்போது வழக்கமாக ஆட்சி செய்பவர்கள் மோசடி செய்யும் நிலையில் தற்போது ஒரு மோசடியே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தற்போது வடமாநிலங்களிலேயே வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது . மேலும் 200 தொகுதிகள் கூட கிடைக்காது என்ற கருத்து கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் ஊழல் வெளிவந்ததால் தற்போது ஊழல் குறித்து பேசாமல் கச்சத்தீவு விவகாரத்தை மோடி பேசுகிறார்.
திமுக இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவேன் என மோடி பேசி வருவதற்கு,
திமுக என்ன சரத்குமாரின் கட்சியா, நள்ளிரவில் இருட்டில் பயந்து உளறுபவனை போல மோடி தோல்வி பயத்தில் உளறி கொண்டிருக்கிறார்.

அப்போது மோடி பொய் பேசும் போது எமன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது உண்மை கலப்பில்லாத பொய் பேசுவது என்பது பெரிய சாமர்த்தியம், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதாரன பிரச்சனைகளுக்கு கூட உள் நாட்டு போர் நடத்திடும் சூழல் உருவாகும்.
பாஜக ஆட்சி, கொள்கை. தத்துவங்களை சவப்பெட்டியில் போட்டு 300 ஆணிகளை கொண்டு அடித்து புதைத்திட வேண்டும்.

திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கர்நாடகாவில் பாஜகவிற்கு வாயில் மண்ணை போட்டு தவிடு உண்ண வைத்து தண்ணீர் குடிக்க வைத்தவர், அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.