எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமான பணி – அமைச்சர் பொன்முடி.!

2 Min Read

தென்பெண்ணையாற்றில் புதிதாக கட்டப்படும் எல்லீஸ் அணைக்கட்டு தரமாகவும், விரைவாகவும் கட்டப்படும்’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பண்ணை ஆற்றில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமான பணியை அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ- க்கள் புகழேந்தி, லட்சுமணன், ஆட்சியர் பழனி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி தலைமையில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட எம்.எல்.ஏ லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டு மறு கட்டுமான பணியை நேற்று துவங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்;

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமான பணி

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க 2023 – 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சரால் சேதமடைந்த அணை கட்டினை ரூபாய் 86.25 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்ய அறிவிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது. சேதமடைந்த அணைக்கட்டினை மறு கட்டுமானம் செய்வதால் 26 ஏரிகளுக்கும் தண்ணீர் சென்று 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி உறுதி செய்யப்படுவதுடன் அணை கட்டினை சுற்றியுள்ள 35 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும் என தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவ சக்திவேல், துணைத்தலைவர் கோமதி, நிர்மல் ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.வி.ஆர். விஸ்வநாதன், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம், கணேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சோபனா, ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், உதவி பொறியாளர் சோபனா, ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், உதவி பொறியாளர் மனோஜ், வழக்கறிஞர் விஜயபாபு, திமுக மருத்துவர் அணி டாக்டர் காவிய வேந்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article

Leave a Reply