சாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பரப்புரைகளில் ஈடுபட கூடாது. அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில்;-

சாதி மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக் கூடாது. இந்த நிலையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேச கூடாது. மதம், சாதி, வகுப்புவாதம் போன்றவற்றை மையப்படுத்தி, தேர்தல்களை அணுக கூடாது.
எந்தப் பிரிவினரையும் இலக்காக்கி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட கூடாது. சாதி மத அடிப்படையிலான வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. அப்போது பொது கூட்டங்களில் பேசும் போது நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

பின்னர் தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சி தலைவர்கள் பொய்யான அடிப்படை ஆதாரங்கள் இல்லாத வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய தகவல்களை பொது வெளியில் தெரிவிக்க கூடாது.
எந்த ஒரு நபர் குறித்த தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்களது பொது வாழ்வுக்கு தொடர்பில்லாத விஷயங்களையும் எந்த ஒரு கட்சி தலைவரும் அல்லது நிர்வாகிகளும் விமர்சிக்க கூடாது.

சாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தேர்தல் பிரச்சாரம் ஈடுபடகூடாது
மேலும் கோயில்கள் மசூதிகள், தேவாலயங்கள் குருதுவாராக்கள் அல்லது வழிபடக்கூடிய எந்த ஒரு இடத்திலும் தேர்தல் கண்ணோட்டத்தில் பரப்புரைகளை மேற்கொள்ள கூடாது. அதேபோன்று உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கொண்ட எந்த ஒரு விளம்பரங்களையும் ஊடகங்களுக்கு கொடுக்க கூடாது.

குறிப்பாக பெண்களை கண்ணிய குறைவாக நடத்தும் செயல்களில் ஈடுபட கூடாது. சமூக வலைதளங்களில் மோசமான, தரம் தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தேர்தல் ஆணையத்தில் எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.
Leave a Reply
You must be logged in to post a comment.