தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக தேர்வு – ரேவேந்த் ரெட்டி..!

2 Min Read

தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக ரேவேந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தெலுங்கானாவி முதல்வர் யார் என்பதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

ரேவேந்த் ரெட்டி

இதனை தொடர்ந்து முதல்வர் பதவிக்கான ரேசில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரேட்டி தவிர பட்டி விக்ரமார்கே, உத்தம் குமார், கோமட்டி ரெட்டி, வெங்கட் ரெட்டி, ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனால் தெலுங்கானாவில் யார் முதல்வர் என முடிவு செய்ய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் முடிவிற்கு ஒப்படைக்கப்பட்டது. இதனை எடுத்து நேற்று டெல்லியில் கார்கே தலைமையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா மாநில மூத்த தலைவர்கள் பட்டி விக்ரமார்கே, உத்தம குமார், கோமட்டி ரெட்டி, வெங்கட் ரேட்டி, உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில்;

ரேவேந்த் ரெட்டி

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தலைவராகவும், முதல்வராகவும் தேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்தார். இதனால் தெலுங்கானாவில் யார் முதல்வர் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவை முடிவுக்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இனி யார் யாருக்கு துணை முதல்வர் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply