தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா மேக்கரை பகுதியில் திருவாடுதுறை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான பல நூறு இயக்க நிலங்கள் நிரம்பி காணப்படுகின்றன.
வனப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்கு சரிசமமாக ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வனப்பகுதியின் மைய பகுதியில் அமைந்துள்ள ஆதினத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சருகுகலில் வெயிலின் தாக்கம் காரணமாக காட்டு தீ ஏற்ப்பட்டு அங்குள்ள மரங்களில் இன்று திடீரென தீப்பற்றி எறிய தொடங்கி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது காற்றின் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருகின்றது.

அப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்து வருவதால் வனத்துறையினர் அங்கு முகமிட்டு வனப்பகுதியில் தீ பரவி விடாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காற்றின் தாக்கம் அதிகம் உள்ளதின் காரணமாக அந்த இடத்தில் தீ மல மலவென பரவி வருகின்றது. மேலும் அதில் அறிய வகை மரங்களும் எரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன தொடர்ந்து கடையநல்லூர் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டுள்ள உள்ளனர்.

இதனால் வனப்பகுதியின் மையப்பகுதியில் தீப்பிடித்து எரிந்து வருவதால் அங்குள்ள வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஊருக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக வடகரை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.