திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்தலாம் என்றும், ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும் மதுவை பயன்படுத்தலாம்

மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,”மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு. பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.