- சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்பட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் குற்றப் பத்தரிகையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில், 12 வது நபராக சேர்க்கப்பட்டுள்ள இயக்குனர் அமீர், சட்ட விரோதமான பணத்தை கையாண்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.