ஆப்கான் – புதுடெல்லியில் நிலஅதிர்வு மக்கள் அச்சம்

1 Min Read

நேற்று இரவு டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் நேற்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவில் சமீபகாலமாக அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்   ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா என பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை சுற்றிய பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது

அதன்படி டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில் 3 வினாடிகள் வரை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கட்டங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் அவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். மேலும் டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நன்கு உணர முடிந்தது என பலர் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் வசுந்தரா, காசியாபாத் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இதுதவிர பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply