நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – அதிகாரிகள் தீவிர வாகன சோதனை..!

2 Min Read

புகழ்பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இதனையொட்டி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா செல்ல வரக்கூடிய அனைத்து வாகனங்களும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, இ-பாஸ் உள்ளதா என தீவிர சோதனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளை தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் இபாஸ் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாகனங்களும் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.


நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்

மேலும் சுற்றுலாவை தவிர வணிக ரீதியாகவும், அதேபோல தொழில் ரீதியாகவும் செல்லக்கூடிய வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்லார் தூரி பாலம் அருகே கூடுதலாக செக்போஸ்ட்டுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

இந்த சோதனை சாவடியில் ஒவ்வொரு வாகனமும் சோதனை செய்யப்பட்டு, இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்கு செல்ல அனுமதிக்கபடுகிறது. இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அதற்கான இணையதள வழிகாட்டுதல்கள் விளக்கப்பட்டு, இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

மலை பிரதேசமான நீலகிரியின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இயற்கையை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவுமே இந்த நடவடிக்கை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share This Article

Leave a Reply