சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பபட்டி கிராமத்தில், அதிமுகவின் கொடியேற்றி வைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது நிபந்தனைகள் விதித்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மாற்றி மாற்றி பேசுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், நான் ஒரு விவசாயி இன்றைக்கும் நான் விவசாயம் செய்து வருகின்றேன். விவசாயி, விவசாய தொழிலாளி இருவரும் இரண்டு கண்களாக பார்த்ததால் தான் அவர்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தந்தோம். இந்தியாவிலேயே தரமான தார் சாலை உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெயரை பெற்றோம். அதிமுக ஆட்சியில் உயர் கல்வி படிப்பவர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம். இன்றைய ஆட்சியாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை கலைஞர் நினைவாக கடலுக்குள் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா வைக்கின்றனர்.

எழுதாத பேனாவுக்கு 82 கோடி எதற்கு? அரசு பணத்தை எடுத்து வீண் செய்யக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கைஅந்த நிதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனா வாங்கி தரலாம். 2017-18 அரசு பள்ளியில் படித்த 3,80,000 மாணவர்களில் 9 பேர் தான் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
7 .5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 3145 மருத்துவ சீட்டில் 584 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றனர். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை தந்தது அதிமுக ஆட்சி அதை தான் இப்போது ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக தெரிவித்தார்.
ஆளும் திமுக அரசை கடுமையாக சாடிய அவர், ” மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியவில்லைஒரு யூனிட் மின்சாரம் ஆறு ரூபாய்க்கு வாங்க வேண்டியதை 12 ரூபாய்க்கு வாங்கி கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடிப்பதற்காகவே திட்டம் போட்டு வருகின்றனர்
இப்போது ஒவ்வொருத்தராக சிறைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவு பேர் போவார்கள் என்று தெரியாது.
முப்பதாயிரம் கோடி ரூபாயை கையில் வைத்துக் கொண்டு சபரீசனும் உதயநிதி ஸ்டாலினும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நிதி அமைச்சரே ஒரு ஆடியோவில் பேசியுள்ளார். அதனால்தான் மத்திய அரசு இதில் தலையிட்டு என்ன குற்றம் நடைபெற்றுள்ளது என்று கண்டறிந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
மக்களுக்காக குரல் கொடுத்து ஏழு முறை நான் சிறை சென்றவன் நான் உண்மையாக உழைத்ததால்தான் இந்த நாட்டிற்கு முதலமைச்சராகும் வாய்ப்பை மக்கள் தந்தனர். ஆனால், நடைப்பயிற்சியின் போது கூட முதலமைச்சர் ஸ்டாலினும் சுகாதாரத்துறை அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தைப் பற்றிதான் பேசுகின்றனர். மக்களுக்கு தேவையான சுகாதார வசதி குறித்து எந்த ஆலோசனையும் பேசவில்லை. முதலமைச்சருக்கு குடும்பம்தான் முக்கியம். தேர்ந்தெடுத்த மக்கள் முக்கியமல்ல என்று விமர்சித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.