கோடைகாலம் நிலவி வருவதால் அனைவரும் சுற்றுலா போன்ற இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் இருப்பவர்கள் வீட்டின் அருகில் உள்ள ஏரி, குளம் மற்றும் குட்டை நீரோடை போன்றவைகளில் நீராடி வெயிலின் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.
அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் தேர் பேட்டை பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாத நிலையில் வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். வழக்கமாகவே அந்த ஏரிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீராடி வருவார்கள்.
அதுபோலவே அந்த ஐந்து சிறுவர்களும் ஏரியில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இரண்டு சிறுவர்கள் நீச்சல் அடிக்க முடியாத ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அங்க அவர்களால் நீச்சல் அடிக்க முடியாததால் பரிதாபமாக நீரில் மூழ்கியுள்ளனர். அதனை கண்ட மற்ற சிறுவர்கள் அலறி கத்தியதால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏரியை நோக்கி ஓடி வந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு சிலர் ஏரியில் குதித்து சிறுவர்களை நீரில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அந்த இரண்டு சிறுவர்களும் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுவர்களை மீட்கும் பணியை தொடங்கினார்கள். தீயணைப்பு வீரர்களின் உதவியால் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது மிக ஆழமான இடத்தில் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடைத்தனர்.
சடலங்களுடன் தீயணைப்பு துறையினர் கரையேறினார்கள். அதனைத் தொடர்ந்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் சேசாங் மற்றும் வினோத் சிங் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களைப் பார்த்து கதறி அழுதிருக்கிறனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுவர்கள் தானாக ஏரியில் குளிக்கச் சென்றார்களா? இல்லை, யாருடைய தூண்டுதலில் ஏரியில் குளிக்க சென்று மாட்டிக் கொண்டார்களா? என போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.