பட்டுக்கோட்டையில் பெய்து வரும் மழையால் பேருந்து நிலையத்தில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி குளம் போல் காட்சி..

1 Min Read
  • பட்டுக்கோட்டையில் பெய்து வரும் மழையால் பேருந்து நிலையத்தில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால்
    பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதி.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்த மழை காரணமாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் மழை நீர் வெள்ளம் புகுந்தது.

- Advertisement -
Ad imageAd image

மேலும் அங்கு ஓடும் கழிவுநீர் வாய்க்காலுடன் மழை நீரும் இணைந்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது இதன் காரணமாக பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்லும் அவல நிலை உள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்பதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை இருப்பதோடு கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/thanjavur-district-unidentified-male-body-recovered-near-antipatti-footbridge/

மேலும் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article

Leave a Reply