பாலம் வசதி இல்லாததால் பம்பை ஆற்று வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமந்தபடி சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அருகே உள்ள காணை குப்பத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரெனும் இறந்தால், அவர்கள் உடலை அதே பகுதியில் உள்ள பம்பை ஆற்றின் குறிக்கே அமைக்கப்பட்டுள்ள தரை பாலத்தின் வழியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பம்பை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த ஆண்டு கனமழை பெய்த மழையின் போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதை அடுத்து அங்கு புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இதனிடையே சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டத்தில் கலந்து விழுப்புரம் தெண்பெண்ணை ஆற்றில் பெருகெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அதன் கிளை ஆறான பம்பை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணை குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உடல் நிலை சரியில்லாமல் உயிர் இறந்தார். ஆனால் அந்த உடலை எடுத்த செல்ல ஆற்றை கடந்து சுடுகாட்டுக்குச் செல்ல பாலம் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி ஆறுமுகத்தின் உடலை பம்பை ஆற்று வெள்ளத்தில் நடுவே தோளில் சுமந்தபடி கடந்து சுடுகாட்டுக்கு சென்று அடக்கம் செய்தனர். இந்த அவல நிலையை போக்க பம்பை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.