மன்னார் வளைகுடா தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்துறை அறிவிப்பு. இராமநாதபுரம் மாவட்ட அளவில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மன்னார் வளைகுடா தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஜூலை 21 வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்துறை அறிவிப்பு.

இதனை அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.மன்னார் வளைகுடா கடல் முதல் குமரிக் கடல் வரை உள்ள தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரையிலும் வீசப்படும் என்பதால், வானிலை மைய அறிவிப்பின்படி மன்னார் வளைகுடா முதல் குமரிக்கடல் வரை உள்ள தென்கடல் பகுதி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம், உச்சிப்புளி, நரிப்பையூர், சாயல்குடி, உள்ளிட்ட தென்கடல் பகுதி மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை, தங்களது படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறு மீனவர்களுக்கு மீன் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வானிலை மைய அறிவிப்பை மீறி மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் கண்டறியப்பட்டால் மீன் பிடி சட்டத்தின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமேஸ்வரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.