மகளை 2வது முறையாக கடத்தி சென்ற வாலிபர் – பெற்றோர் தர்ணா போராட்டம்..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மகளை மீண்டும் வாலிபர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரப்போறியும், பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இந்த நிலையில் மனு கொடுக்க வந்த தம்பதியினர் திடீரென தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வடக்கு ரயில்வே குடியிருப்பை சேர்ந்த தம்பதியான அந்துவான் மரிய ஆரோக்கியம் என்பது தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; எங்களது மகளை சேவியர் குடியிருப்பை சேர்ந்த ஒருவர் ஒருதலையாக காதலித்ததை நாங்கள் மறுத்தோம். அவர் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி எங்களது மகளை கடந்த ஜனவரியில் வீட்டிலிருந்து கடத்திச் சென்று விட்டார். தகவல் அறிந்து நாங்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், அவர்கள் எனது மகளை கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் எங்கள் மகளை கடத்திய நபர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்த நிலையில் மகளிர் போலீசார் நான் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க கோரி எங்கள் வீட்டுக்கும் பணி புரியும் இடத்துக்கும் வந்து தொல்லை செய்தனர். இதையடுத்து பெண்ணை கடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள் எஸ்.பி யிடம் புகார் அளித்தும், நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த நபர் கடந்த 10 ஆம் தேதி மீண்டும் எங்களது மகளை கடத்திச் சென்று விட்டார். போலீசார் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply