சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் மறைவு – ஓ.பி.எஸ் இரங்கல்

1 Min Read

டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல கண் மருத்துவரும், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

எஸ். எஸ். பத்ரிநாத்

டாக்டர் பத்ரிநாத் அவர்களால் தொடங்கப்பட்ட சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஏழையெளிய மக்களுக்கு இலவசமாக கண்புரை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான இளம் கண் மருத்துவர்களை உருவாக்கிய பெருமையும் டாக்டர் பத்ரிநாத்திற்கு உண்டு. இவரது சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தன்னலம் துறந்து பிறர் நலத்துக்காக உழைத்த பெருமைக்குரியவர் டாக்டர் பத்ரிநாத் அவர்கள். இவருடைய இழப்பு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

ஓ.பன்னீர்செல்வம்

டாக்டர் பத்ரிநாத் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply