- உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு வருகை தரும் டாக்டர் கோவி.செழியன் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வர மேல கலைஞர்களின் இன்னிசையோடு வான வேடிக்கைகள் முழங்க தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான அணைக்கரையில் இருந்து தொண்டர்களின் புடை சூழ உற்சாக வரவேற்பு.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மூன்று முறை தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் கோவி செழியன் அவர்கள் தமிழக அரசு தலைமை கொறடவாக பதவி வகித்த வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
உயர்கல்வித்துறையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவப் பருவத்தில் இருந்தே தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நம்பிக்கை உரியவராகவும், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் மீது அதீத பற்று கொண்டவராகவும் இருந்து வந்த டாக்டர் கோவி செழியனுக்கு உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டதையடுத்து திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/dr-kovi-chezhian-who-took-charge-as-the-minister-of-higher-education-visited-his-own-constituency/
குறிப்பாக அமைச்சர் பெருமக்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் ஆன்மீக பெரியோர்கள் ஆதீனங்கள் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இன்று சொந்த தொகுதியான திருவிடைமருவத்தூர் தொகுதிக்கு வருகை தந்தார் தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான அணைக்கரையில் திருப்பனந்தாள் ஒன்றிய கழகத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வர மேல கலைஞர்களின் இன்னிசையுடன் இசை வரவேற்பும் ஏராளமான தொண்டர்கள் மலர் மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.