உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டாக்டர் கோவி செழியன் தன் சொந்த தொகுதிக்கு வருகை.!

2 Min Read
  • மனுதர்ம கொள்கைக்கு பதிலளிக்க கூடிய வகையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எனக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கியது திராவிட ஆட்சியின் எடுத்துக்காட்டாகும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் சொந்த தொகுதிக்கு வருகை தந்த டாக்டர் கோவி செழியன் பேட்டி.

உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதியான திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனுக்கு மாவட்ட எல்லை பகுதியான அணைக்கரையில் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பனந்தாள் ஒன்றிய கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் மலர் மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில்.

- Advertisement -
Ad imageAd image

திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஏழை குடும்பத்தில் பிறந்த தொண்டனை உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கியது தான், கல்வி என்றால் நீ பயிலக் கூடாது கல்வி என்ற சொல் உன் காதில் கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவேன் எனும் மனுதர்மக் கொள்கைக்கு பதிலளிக்கும் வகையில் எந்த சமுதாயத்தில் பிறந்தவர்கள் கல்வி பயிலக் கூடாது என்று சொன்னார்களோ இந்த சமுதாயத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கியது திராவிட மாடல் ஆட்சியாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களை காக்கக்கூடிய காவல் அரணாக முதல்வர் விளங்குகிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். 50 ஆண்டுகாலம் இல்லாத சாதனையை உயரிய துறையான உயர்கல்வித்துறையில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவரை அமைச்சராக்கி வரலாற்றுச் சாதனையை முதல்வர் புரிந்துள்ளார் எனவும்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/blood-donation-camp-organized-by-karanodai-arima-sangam-on-the-occasion-of-gandhi-jayanti/

உயர்நீதிமன்ற நீதிபதியாக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இடம்பெற வேண்டும் என பெரியாரும் அண்ணாவும் நினைத்ததை தலைவர் கலைஞர் நிறைவேற்றினார் அந்த அடிப்படையில் உயர்கல்வி துறையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளித்தது முதல்வர் தளபதி அவர்களின் செயல் திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டாகும். முதல்வர் தளபதி என்ன நினைக்கிறாரோ துணை முதல்வர் உதயநிதி என்ன நினைக்கிறாரோ அதனை நிறைவேற்றும் சேவகனாக என்றும் பணியாற்றுவேன் எனவும் கூறினார்.

Share This Article

Leave a Reply