தஞ்சை மாவட்டத்தில் விபத்தில் சிக்கி, ரத்த காயத்துடன் இருந்த தந்தையும், வலியால் துடித்த இரண்டு பள்ளி சிறார்களையும் மீட்டு, தனது வந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம்.
பூபதி என்பவர், மற்றோருவர் காயம் அடைந்த நிலையில், மேலும் ஒருவரை 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் புறப்பட்டு சென்றார். தஞ்சை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் திடிரென்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிக்கி, ரத்த காயத்துடன் இருந்த தந்தை மற்றும் பள்ளி சீருடையில் இரண்டு சிறார்களும், மற்றொரு இரண்டு ஆண்களும் இரத்த காயங்களுடன் சாலையில் மயங்கி கிடந்தனர்.

புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் திடிரென்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிக்கி கொண்ட இரண்டு பள்ளி சிறார்களின் அலறல் சத்தம் கேட்டு, சாலையில் இடது பக்கம் திசையில் காரில் வீட்டுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி காரை திருப்பி வந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி, காயத்துடன் வலியால் துடி துடித்து கொண்டு இருந்த இரண்டு பள்ளி சிறார்களையும், அவரது தந்தையையும் காப்பாற்றி, அவர்களை தனது வந்த காரில் ஏற்றி, ஆறுதல் வார்த்தைகளை சொல்லி,பின்னர் பயப்படாமல் போங்கள் என கூறி, தனது தஞ்சை துணை மேயர் கூட வந்த உதவியாளரையும் துணைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அதே விபத்தில் சிக்கிய மற்றொரு வரை 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறி,ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் தஞ்சை துணை மேயர்.டாக்டர். அஞ்சுகம் பூபதி வீட்டுக்கு சென்றார். சாலையில் முன்னாள் சென்ற ஜுபிடர் இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த ஆக்டிவா வாகனம் திடிரென்று மோதி விபத்து ஏற்பட்டதாக போலிசார் வழக்கு பதிவு செய்து, முதல் கட்ட விசாராணையில் தகவல் தெரிய வந்ததது.அந்த பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.