சித்திரை விஷூ தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,மேலும் இந்நாளில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும்,மேலும் தமிழர்கள் வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும்,

இதில் வீட்டு பூஜை அறையில் இறைவனுக்கு காய்கனிகள் படைத்து அதனை அதிகாலையில் எழுந்து வழிபடுவர்,இதனால் செல்வம் செழிக்கவும் வாழ்வில் இன்பம் பெருகும் என்பது ஐதிகம், இதனை கொண்டாடும் விதமாக கோவில்களிலும் வீடுகளிலும் சுவாமிக்கு படைக்க பூக்களின் தேவை அதிகம் உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது, பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது, குறிப்பாக ஆயிரம் ரூபாய் விற்பனைச் செய்யப்பட்டு வந்த பிச்சிப் பூ ரூ.1750 க்கும் மல்லி பூ.ரூ.1,200க்கும், மஞ்சள் சிவந்தி ரூ.300க்கும், வெள்ளை சிவந்தி ரூ.350 ரூபாய்க்கும், அரளி ரூ.300 ரூபாய்க்கு விற்பனைகிறது.

இதனால் 40 டன் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கேரளாவிலும் சித்திரை விஷூ மிக விமர்சையாக கொண்டாடப்படுவதால் அங்கிருந்து வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்க படை எடுத்துள்ளனர், இதனால் தோவாளை மலர் சந்தை களைக்கட்டியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.