சொத்து தகராறில் உறவினர் கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்.

1 Min Read
  • சொத்து தகராறில் உறவினர் கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி பரபரப்பு தீர்ப்பு.

 

- Advertisement -
Ad imageAd image
அமித் அங்கிருந்த கத்தியால் பவன்குமாரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த உத்திராபதி. இவரது அண்ணன் ராமமூர்த்தி மற்றும் தம்பி சின்னப்பா. இந்நிலையில் ராமூர்த்தி மனைவி பிரேமாவதி,(50),. சின்னப்பா ஆகியோர் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், பிரேமாவதி துாண்டுதல் பேரில், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தனது அண்ணன் உத்திராபதியிடம், சின்னப்பா சொத்துக்கேட்டு தகராறு செய்து அதனால் ஏற்பட்ட பகையில் உத்திராபதியை வெட்டிக்கொலை செய்தார்.

இது குறித்து உத்திராபதியின் மகள் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னப்பா மற்றும் கொலைக்கு துாண்டுதலாக இருந்த பிரேமாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஏப். 30ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து இரண்டாம் எதிரியான பிரேமாவதி மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது,

இந்நிலையில் புதன்கிழமை பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி வழக்கினை விசாரணை செய்து, பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராத தொகையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Share This Article

Leave a Reply