அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த காணொளியில் அவர் கூறியுள்ளதாவது, ’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல. எச்சரிக்கை.

நாங்கள் ஆட்சிக்கு மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காக கட்சி நடத்துகிறவர்கள். கொள்கையைக் காப்பாற்றத்தான் கடைசிவரை போராடுவோம்,போராடுகிறோம்.
மனம்., உடல் ரீதியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நோயை உருவாக்கி உள்ளனர். இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் வேறொன்று இருக்க முடியுமா?தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2 முறை அமைச்சராகவும் இருக்கும் செந்தில் பாலாஜியை, ஏதோ தீவிரவாதியை போல அடைத்து வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன வந்தது?
அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு உள்ளதா? உ.பி. மத்திய பிரதேசம், குஜராத்தில் ரெய்டுகள் நடத்தப்படுமா, நடத்தப்படாது. ஏனென்றால் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து காணொளியை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.