ஹமாஸ் தலைவர் மரணத்துடன் போர் முடிகிறதா? பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும்?

2 Min Read
  •  காசா மீதான தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் இஸ்ரேல் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இந்த மரணத்துடன் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதெல்லாம் முடியாது, போர் நிச்சயம் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த தாக்குதல் இஸ்ரேலின் ஈகோவை தூண்டிவிட்டது. எனவே, ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கிறோம். அதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கிறோம் என அந்நாட்டின் ராணுவம் களத்தில் இறங்கியது. போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில், இதில் சம்பந்தமே இல்லாத சுமார் 41,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இறுதியாக கடந்த வியாழக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரை ராஃபாவில் வைத்து கொன்றது. அவரது கொலையுடன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் இப்போதுதான் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி, பதற்றத்தை ஏற்படுத்தினார். அதாவது ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்கும் வரை போர் முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. எனவே காசா மீது தாக்குதல் நீடித்து வருகிறது.

மறுபுறம், ஹமாஸ் தரப்பில் புதிய தலைவரை அறிவிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஷுரா கவுன்சில் இந்த வேலையை கையில் எடுத்திருக்கிறது. இந்த கவுன்சில்தான் ஹமாஸின் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும். சின்வாரும் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய தலைவர், காசாவில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. வெளியிலிருந்து கூட தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

ஆனால், அவர் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் அளவுக்கு தகுதியும், அதிகாரமும் படைத்தவராக இருக்க வேண்டும். இப்போதைக்கு லிஸ்ட்டில் இருவரின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. ஒன்று கலீத் மெஷால், மற்றொன்று ஷூரா கவுன்சிலின் தலைவராக இருக்கும் முகம்மது டார்விஷ். இதில் கலீத் மெஷால் ஏற்கெனவே ஹமாஸுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து கொல்லப்பட்ட ஹனியேவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவராவார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/bullet-in-the-head-what-sinwar-did-at-the-last-second-shock-in-the-autopsy-results/

இருவரியில் எவரேனும் ஒருவர் தலைவராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இஸ்ரேலை பொறுத்த வரை ஆயுதங்களை போட்டுவிட்டு, பணய கைதிகளை விடுவித்தால் போர் நிறுத்தம் சாத்தியம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் புதிய தலைவரை விரைவில் ஹமாஸ் அறிவிக்க இருப்பதால், இப்போதைக்கு இந்த போர் முடிவுபெறாது என்று சொல்லப்படுகிறது.

Share This Article

Leave a Reply