2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 15ம் தேதியே கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ராஷ்ட்ரீய புரஸ்கார் தளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.
பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் வழங்கப்படும் பத்ம விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. 1954-ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், தொழில் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த விருதை மக்கள் பத்ம விருதாக வழங்க உறுதி பூண்டுள்ள மத்திய அரசு ஆன்லைன் வாயிலாக விருதுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.