நெய்குன்னம் கிராமத்தில் திமுக எம்எல்ஏ உறவினர் கொலை வழக்கு – அண்ணன் முறை கொண்ட அருண் கைது..!

2 Min Read

திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி இரவு கலைவாணன் என்பவரை கொலை செய்த சம்பவத்தில், அவரது அண்ணன் முறை கொண்ட அருண் கைது செய்யப்பட்டனர். பின்னர் அருண் வீட்டில் இருந்து ஏர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மேலும் கலைவாணனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் கும்பகோணத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலைவாணன்

பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி இரவு கலைவாணன் என்பவரை கொலை செய்ததற்காக அவரது அண்ணன் முறை கொண்ட அருண் கைது செய்யப்பட்டு நேற்று, திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,

பாளையங்கோட்டை சிறையில் எதிர்வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொடூரமாக கொலை

அருண், கலைவாணனை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் கும்பகோணத்தில் உள்ள ஒரு இரும்பு கடையில் வாங்கியது தொடர்பான சிசிடிவி காட்சியிணை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அருண் வீட்டில், காவல்துறையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஏர்கன் வகையைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அதற்கு தேவையான பால்ரஸ் குண்டுகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கி பறிமுதல்

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகை துப்பாக்கிகளுக்கு உரிமம் தேவையில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும்
எதற்காக அருண் இத்தகைய துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் தெரியவரும்.

அருண், கலைவாணனுக்கு 25 லட்ச ரூபாய் தர வேண்டிய நிலையில் அதனை தராமல் இருப்பதற்காக கலைவாணனை கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது.

அரிவாள் மற்றும் ஏர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கி, செல்போன் பறிமுதல்

அப்போது முதல் நாள் இரவு அருண் கலைவாணனை வெட்டி கொன்று விட்டு, அடுத்த நாள் தனக்கு எதுவும் தெரியாதது போல், உண்மை குற்றவாளியை கண்டுபிடித்தால் தான் கொலை செய்யப்பட்ட கலைவாணனின் உடலை வாங்குவோம் என அருண் பேட்டி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply