தமிழக மக்களை திமுக ஏமாற்றுகிறது என்று திருக்கோவிலூரில் நடந்த பாரதிய ஜனதா பொது கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே என் மண், என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வான வி.ஏ.டி கலிவரதன் தலைமை தாங்கினார். மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் ஆர். கார்த்திகேயன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் வக்கீல் என்.ஆர்.கே என்கிற என். ராதாகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் டி.கே முரளி ஆகிய முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்றதால் யாத்திரை நிகழ்ச்சி பொதுக்கூட்டமாக நடத்தப்படுகிறது. அவர் மக்களைப் பற்றி சிந்திக்க கூடிய தலைவர் ஆவார்.

அதனால் தான் இன்னலில் இருக்கும் மக்களை சந்திக்க தென் மாவட்டத்திற்கு ஓடிடோடி இருக்கிறார். ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணி பேசுவதற்காக சென்றிருக்கிறார்கள். இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே ஊழல் கட்சியாகும். அவர்களை ஊழல் கூட்டணி என்று சொல்லலாம். தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. குடும்பத்திற்கு நடக்கும் இந்த கட்சியை மக்கள் வெறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் வி. அருள், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தொழில் அதிபர் ஜி. கிருஷ்ணமூர்த்தி வக்கீல் வி.ஏ.டி.கே திருமால், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சந்தோஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் எஸ்.டி புவனேஸ்வரி, இன்ஜினியர் ராமலிங்கம், நகர செயலாளர் திருமுருகன், பிரபாகரன் வக்கீல், உமாசங்கர், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் அழகேசன், திருக்கோவிலூர் நகர பொருளாளர் டி. ரமேஷ், எரியீட்டி ஏழுமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் அலமேலு, ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி தலைவர் பத்மா, பழனி, நிர்வாகி பரணி சுப்பிரமணியன் டி.என்.ஆர் பாஸ்கரன், துணைத் தலைவர் கோவிந்தன், சுரேஷ், சக்திகுமார், மகாலிங்கம், தினேஷ், விஜய் சுகுமார், ராம்குமார், விக்னேஷ், திருக்கோவிலூர் வட்டாரத் தலைவர் அறிவழகன், முன்னாள் வட்டார தலைவர் ராமன், கண்டாச்சிபுரம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், எஸ்.எல்.ஐ.சி ஏழுமலை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.