திமுக அரசு தமிழகத்தில் போதை பொருட்களுக்கு சிவப்பு மாப்பியா அரசாகவும், ஊழல் அரசாகவும், வாரிசு அரசாகவும் உள்ளது பாஜக அகில இந்திய துணை தலைவர் சிவராஜ் சிங்க் சவுகான் வேலூர் பாஜக கூட்டத்தில் பேச்சு.
வேலூரில் இன்று பாஜக சார்பில் பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் அகில இந்திய துணைத் தலைவர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், உலகத்தின் மிகச்சிறந்த வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இதற்கு பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்.
பல நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றிருக்கும் போது தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திருக்குறளை மேற்கோள்காட்டி அதன் பிறகு தான் தன்னுடைய உரையை துவங்குவார்.

அந்த அளவுக்கு தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளார்.
புதிய பாராளுமன்ற திறக்கப்பட்ட போது செங்கோலை அடையாளமாக வைத்தார். இது தமிழகத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் 50% இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும் வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் ஊழலில் சிக்கி உள்ளனர்.
ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை பிளவுபடுத்த வகையில் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். திமுக அரசுவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போதை பொருள்களை ஊக்குவித்து சிவப்பு மாப்பியாவாக உள்ளது. சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.

முன்னதாக பாஜக கட்சி தொண்டர்கள் சிவராஜ் சிங்க் சவுகான் வருவதற்கு முன்னர் உணவு உண்ண சென்றனர். ஆனால் அங்கு கதவு திறக்கபடவில்லை. இதனால் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சாப்பிட சென்றனர்.
அந்த நேரத்தில் சிவராஜ் சிங்க் சவுகான் வந்ததால் நாற்காலிகள் காலியாக காட்சியளித்தது. சில தொண்டர்கள் சாப்பிடாமல் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, வெங்கடேசன், மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன் உள்பட பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.