முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உதயநிதி ஸ்டாலின் , கனிமொழி , சபரீசன் உற்பட 12 திமுக கட்சியினரின் சொத்துப்பட்டியலை இன்று பாரதிய ஜனதாக்கட்சியின் சென்னை அலுவலகத்தில் அண்ணாமலை வெளியிட்டார்.
15 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்ட தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்களை வெளியிட்டார் . இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை சரியாக 10 :15 மணிக்கு சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை , இன்று தான் வெளியிடப்போகும் தரவுகள் சம்மந்தமாக பத்திரிகையாளர்களிடம் எந்த கலந்துரையாடலிலும் ஈடுபட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் .
தான் வெளியாடப்போகும் அணைத்து தரவுகளும் enmannenmakkal.com என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் அதை நன்கு படிக்கும்படியும் கேட்டுக்கொண்டார் .
“நான் வெளியிடும் அனைத்து புகார்களுக்கும் ஆதாரம் இருக்கும் சம்பந்தப்பட்ட நபரிடம் முதலில் கேள்வி கேளுங்கள் பிறகு உங்கள் சந்தேகம் எதுவாயினும் அதை அடுத்த வாரத்தில் தெளிவாக விளக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியின் மாநில தலைவராக மாதம் ஒன்றிற்கு ஏழு முதல் எட்டு லட்ச ரூபாய் வரை எனக்கு செலவாகிறது. வீட்டு வாடகை உதவியாளர்கள் சம்பளம் உட்பட அனைத்துமே நண்பர்கள் கட்சிக்காரர்கள் உடைய உதவியால் தான் ஈடு செய்து கொண்டு வருகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார் .
Leave a Reply
You must be logged in to post a comment.