பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை. ஜூலை 9 ல் தொடங்குகிறார்

1 Min Read
பாஜக தலைவர் அண்ணாமலை

திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாதையாத்திரையை வரும் ஜூலை ஒன்பதில் துவங்கி டிசம்பர் வரை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image


கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அந்த மாநிலத்தில் பணியாற்றிய அண்ணாமலை ஓட்டுப்பதிவு முடிந்த பின் சென்னை திரும்பி உள்ளார்.


சென்னை திரும்பியதும் அவர் கூறியதாவது.
கர்நாடகாவில் துவக்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடிய அளவு போதுமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவது கடினம் என ஆருடம் கூறினர். அதற்கான பிம்பத்தை கட்டமைத்தனர். ஆனால் பிரச்சாரத்துக்காக மாநில முழுவதும் சுற்றி வந்த போது அப்படி ஒரு நிலை களத்தில் இல்லை என்பதை உணர்ந்தேன்.
இந்த தகவலை கட்சி மேலிடத்தில் கூறியதும் தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. பிரதமர் மோடி கர்நாடகாவில் கூடுதலாகவே பிரச்சாரம் செய்தார். இது மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அண்ணாமலை

நேர்மையை கூறியே ஓட்டு கேட்டோம். கர்நாடக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது புது அனுபவங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது.
இனி தமிழக அரசியல் தான் முக்கியம் “திமுக பைல்ஸ்” என்ற பெயரில் திமுகவினர் சொத்து பட்டியல் மற்றும் முதல்வர் தொடர்பான ஊழல் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி மிரட்டி பார்க்கின்றனர்.


இந்த அண்ணாமலை அதற்கெல்லாம் பயப்பட மாட்டார். பாஜகவும் பயப்படாது. முதல்வர் ஸ்டாலின் என் மீது நேரடியாக அவதூறு வழக்கு போட்டுள்ளார். அதை வரவேற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
வரும் ஜூலை ஒன்பதில் துவங்கி “என் மண் என் மக்கள்” என்ற பாதையாத்திரையை டிசம்பரில் முடிக்கிறேன்.
பாதயாத்திரையின் போது தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்படும். இந்த பாதயாத்திரை வாயிலாக அனைத்து மாவட்ட மக்களையும் சந்திக்க இருக்கிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article

Leave a Reply