சொன்னதை செய்த திமுக – கோவையில் பொதுமக்களுக்கு ஆடு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்..!

2 Min Read

கோவை மாவட்டம், தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக மற்றும் பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அப்போது, அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக ஆடு வெட்டி பிரியாணி போடுவோம் என தெரிவித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என குறிப்பிடத்தக்கது.

திமுக

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 20-வது தொகுதியான கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. விறுவிறுப்பாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 71.7% வாக்குகள் பதிவாகின.

அண்ணாமலை பின்னடைவு

இந்த தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இம்முறை திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றது.

இனிப்பு வழங்கிய திமுகவினர்

இந்த நிலையில், கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார். இதனையொட்டி, திமுக-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையில் அண்ணாமலை பின்னடைவு – திமுக-வினர் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

இதனிடையே, திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வருகிறார்.

குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக மற்றும் பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அப்போது, அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக ஆடு வெட்டி பிரியாணி போடுவோம் என தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply