பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுகவினர் : விரத்தியில் காங்கிரஸ் கட்சியினர்.!

2 Min Read
  • பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுகவினர்.விரத்தியில் காங்கிரஸ் கட்சியினர்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதியானது தமிழகத்தின் 234 தொகுதிகளில் இரண்டாவது பெரிய தொகுதி ஆகும். தமிழ்நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டும் மீன் பிடி தொழில், மூன்று போகம் மேற்கொள்ளும் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி என பொருளாதாரத்தில் சிறப்பாக அங்கம் வைத்து வரும் தொகுதியாகும். இங்கு தற்போது சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திமுக கூட்டணியோடு வெற்றி பெற்ற துரை சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image
 

 

தற்கால காமராஜர் என பொன்னேரி தொகுதி மக்களால் அன்பாக அழைக்கப்படும் துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை நேரடியாக சென்றும் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நேரில் சென்று சந்தித்து மக்களுக்கான பணிகளை செய்பவருமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் அரசு பணிகளில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஒதுக்கப்பட்டும் புறந்தள்ளப்பட்டும் வருவது அக்கட்சியினர் இடையே பெரிதும் விரக்தியடைய வைத்து இருக்கிறது. இன்று பழவேற்காடு பகுதிக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை தலைவர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சிக்கு பொன்னேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் இவருக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.

மேலும் அருகாமையில் உள்ள ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேபோன்று எங்களதுகட்சியின் மாவட்டத் தலைவரும் பொதுமக்களால் தற்காலிக காமராஜர் என செல்லமாக பெயரிட்டு அழைக்கக் கூடிய எங்கள் மாவட்ட சட்டமன்ற உறுப்பினரை அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட அழைப்பு கொடுக்காமல் நடத்துவது மேலும் அவரை ஒதுக்கி வைத்து விட்டு நிகழ்ச்சிகள் நடத்துவது என தொடர்ந்து நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது இதனை திமுக மேலிடம் சரி செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This Article

Leave a Reply