குறு-சிறு வணிகர்களுக்கு தீபாவளி பரிசு முதலமைச்சருக்கு விக்ரமராஜா பாராட்டு.

2 Min Read
விக்ரமராஜா

வரி விதிப்பினால் பெரும் அவதிக்குள்ளான வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த செய்தி வணிகர்களுக்கு சிறப்பு பரிசாக அமைந்துள்ளது.கொரானாவுக்கு பிறகு மீளாத்துயரில் இருந்து வந்துள்ளனர் வணிகர்கள்.இந்த நேரத்தில் வரி நிலுவைக்கு இதன் மூலம் ஒரு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்லது.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீண்ட நெடிய ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த வாட் வரிவிதிப்பில் நிலுவையில் உள்ள வரி வசூலிப்பினை சமாதான திட்டம் ஒன்றின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது வணிகர்கள் சுதந்திரமாக, இயல்பாக வணிகத்தை நடத்திடவும் வழிவகை செய்யும் வகையில் வாட் வரி நிலுவைக்கான சமாதான திட்டம் ஒன்றினை அறிவித்திடுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து பல இடங்களில் வலியுறுத்தி வந்தது.

வணிக நிறுவனம்

வரி நிலுவை காரணமாக பல்வேறு சட்ட இடர்பாடுகளை வணிகர்கள் சந்தித்து வந்த நிலையில், வாட் வரி நிலுவை சமாதான கோரிக்கையை பேரமைப்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்திற்கும் துறை சார்ந்த அமைச்சர் மூர்த்தி கவனத்திற்கும் தொடர்ந்து எடுத்துச் சென்று வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் வாட் வரி சமாதான திட்டத்தை தமிழ்நாடு அரசு சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தது வணிகர்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருப்பது இந்தியாவிலேயே முதன்முறையாக வரி விதிப்பிற்கு ஒரு சமாதான திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு.இதனால் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது இந்த அறிவிப்பு சிறு குறு வணிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்திருக்கிறது.

விக்ரம ராஜா

இந்த வார்ட் வரி சமாதானத் திட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் வரி நிலுவை வைத்துள்ள சிறு குறு வணிகர்களுக்கு முற்றிலுமாக வரிவிளக்கு அளிக்கப்படுவதும், ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை வரி நிலுவையில் உள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தி விலக்கு பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்ற இனிய இந்த செய்தி வணிகர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பாக வரவேற்கிறது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு துறை அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் எம் ஏ விக்ரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article

Leave a Reply