பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படும் சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுவருவதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவர் கட்டி வந்த புதிய கட்டிடம் அருகே வெட்டி படுகொலை செய்தனர் . இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக முதலில் 11 பேர் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது .
இதனையடுத்து போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொஞ்சம் இதையும் படியுங்க : http://thenewscollect.com/chief-minister-stalin-personally-consoled-the-armstrong-family/
இதுவரை இந்த வழக்கில் 23 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆமஸ்ட்ராங்கை முதலில் வெட்டிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்தபடியே திட்டம் வகித்து , ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக கூறப்படும் பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பல காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டிருந்தாலும் அவர் கொலைக்கு மூல காரணமாக இருந்தது ரவுடி சம்போ செந்தில் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது .சம்போ செந்திலை கைது செய்ய பல இடங்களுக்கும் தனிப்படை சென்ற நிலையில் அவர் தொடர்ந்து பொலிஸாருக்கு தண்ணி காட்டியபடியே தலைமறைவாகவே உள்ளார் .
வாட்ஸ் ஆப் கால் மட்டுமே பயன்படுத்தும் சம்போ செந்திலை ட்ராக் செய்வது போலீசாருக்கு குதிரைக்கொம்பாக உள்ளது .
இதனிடையே சம்மோ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை இதனிடையே மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் , ஜெயிலர் படங்களின் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் பேசியிருப்பது உறுதியானதால், மோனிஷாவிற்கும், மொட்டை கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர் .
மோனிஷாவை தொடர்ந்து இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.