திண்டுக்கல் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கணினி பொருள்கள் பணம் கட்டும் கவுண்டர்கள் எரிந்து சேதமானது.
திண்டுக்கல் மாவட்டம் அருகே ஆர். எஸ். சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் வழக்கம் போல் நேற்று பணிகள் செயல்பட்டு வந்த நிலையில் மாலை வங்கி பணிகளை முடித்து விட்டு வங்கியில் பணி செய்யும் ஊழியர்கள் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.
அப்போது அதிகாலை 4 மணி அளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து புகைமண்டலம் வெளியேறி உள்ளது. இதை அறிந்த பக்கத்து வணிக வளாகத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு துறை வண்டியில் பத்திர்க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எரிந்து பல லட்சம் மதிப்பிலான கணினிகள் ,மேஜைகள், பணம் கட்டும் கவுண்டர்கள் ஆகியவர்களை துரிதமாக தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

இந்த தீயானது 2 மணி நேரத்திற்கு மேல் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய அறை முழுவதும் முற்றிலும் தீ பிடித்து எரிந்ததில் முழுவதும் சேதம் அடைந்தது.

மேலும் தீ அதிக அளவு பரவாலதால் சேமிப்பு அறையில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேலும் RS சாலையில் பிரதான வங்கியாக செயல்பட்டு வரக்கூடிய இந்திய ஓவர் சிஸ் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.