மத்திய அரசில் இருப்பவர்கள் என்ன சாப்பிடுகின்றனர் என தெரியும், இருந்தாலும் அரிசிக்கு மாறுபட்ட ஜி.எஸ்.டி விதிக்க கூடாது, என்பதை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம் நடைபெற்றது. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், அந்த மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனைதொடர்ந்து அமைச்சர் மூர்த்தி இந்த கூட்டத்தில் பேசினார். அப்போது 1999ம் ஆண்டு இந்த சமாதான திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார் எனவும், 5 முறை இது செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றது எனவும், இந்த திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50 ஆயிரம் வரை வரி நிலுவையில் இருக்கும் 95 ஆயிரம் பேருக்கு தள்ளுபடி செய்து 1002 சொத்துகள் ஒப்படைக்க பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அரிசிக்கு மாறுபட்ட ஜி.எஸ்.டி இருப்பதை சரி செய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர் எனவும், மத்திய அரசு அவங்க என்ன சாப்பிடுறாங்க என்ன தெரியும், இருந்தாலும் அரிசிக்கான கோரிக்கையினை ஜி.எஸ்.டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம் எனவும் தெரிவித்தார்.

இது போன்று வணிகவரித்துறையில் தள்ளுபடி செய்து இருப்பது வரலாற்றில் கிடையாது என தெரிவித்தபேட்டி வணிகபெருமக்கள் 12 ஆண்டு காலம் சலனப்பட்டு இருந்தார்கள், அவர்களுக்காகவே இந்த சமாதான திட்டம் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார். 90 சதவீத வணிகர்கள் நியாயமாக இருந்தாலும் 10 சதவீதம் பேர் போலியாக இருந்து வணிகர்களின் பெயரை கெடுக்க இருக்கின்றனர் என தெரிவித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் அதை திரும்ப பெற்று சமாதான திட்டத்திற்கு வந்துவிடலாம் எனவும், மாவட்ட வாரியாக வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களை அழைத்து சமாதான திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இப்போது இருக்கும் நிலுவை வரியை கட்டினால்தான் இன்னும் இரு ஆண்டுகள் வரை இந்த சலுகையை நீடிக்க முதல்வரிடம் கேட்க முடியும் எனவும், சமாதான திட்டம் குறித்து பேசும் போது , முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதை கொண்டு வாருங்கள் . தமிழக மக்களே உங்களை பாராட்டுவார்கள் என சொன்னார் எனவும் தெரிவித்தார். சிறிய தவறுகள் இருந்தால் அபராதம் விதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றேன் எனவும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமாதான திட்டத்தில் மிகப்பெரிய சலுகைகளை அரசு கொடுத்து இருக்கின்றது எனவும், அனைத்து மண்டலங்களிலும் இந்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார். வணிகர்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனவும், விண்ணப்பிப்பதற்கு அரை மணி நேரம் போதும் எனவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கம் இருக்கின்றது, பேக் பண்ணிய அரிசிக்கு ஒரு வித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜி.எஸ்.டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம் எனவும், கோதுமை, அரிசிக்கு பாகுபாடு காட்டுவதாக சொல்லவில்லை எனவும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.