இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை-அமைச்சர் உதயநிதி

2 Min Read
உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கும் அவலம். மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும் என்றும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
அடித்துச்செல்லப்படும் கார்கள்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று நாள் முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை தீவிரம் அடைந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கடுத்து ஓடுகிறது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மழை குறைந்ததுமே மீட்புப் பணிகளில் வேகம்.அதிகப்படுத்தப்படும்.இதற்காக திருச்சியில் இருந்து 5 பஸ்களில் கிளம்பிய தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்களை அழைத்து வருவதாகவும் அதிகாரிகள் அறிவிப்பு.

எனினும் இன்றும் இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தமிழக அரசும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தது. மழை நீர் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனுக்கு உடன் தீர்வு காணவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனினும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று போல இன்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நிவாரண பணிகளை விரைந்து செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடந்து அங்கிருந்த மக்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கினார். முட்டளவு தேங்கியிருந்த மழை நீர்ல் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நிவாரண பணிகளை செய்து வருமாறு கூறினார். இந்த நிலையில், மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும் என்றும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article

Leave a Reply