ரஜினியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தாரா அமைச்சர் துரைமுருகன் ?

3 Min Read
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இரண்டு நாட்களாக இணையத்தை வைரலாக வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையேயான பனிப்போர் , இறுதியாக இன்று முடிவுக்கு வந்தது என்று கூறலாம் .

- Advertisement -
Ad imageAd image

இதற்கு துவக்க காரணமாக இருந்தது , ரஜினிகாந்த் திமுக நிகழ்ச்சியில் கூறிய குட்டி ஸ்டோரி மற்றும் அமைச்சர் துரைமுருகன் அதற்கு அதிரடியாக கொடுத்த பதில் .

கடந்த 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது பயண அனுபவங்கள் மற்றும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் .

விழாவில் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்திரான நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,  அவருக்கே உண்டான பாணியில் குட்டி ஸ்டோரி ஒன்றை கூற ஆரம்பித்தார் , அதில் “பொதுவாக வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களால் பிரச்சனை இல்லை; பழைய மாணவர்களைச் சமாளிப்பது தான் சிரமம். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல, ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள்” .என்றார்

இதுவரை பொதுப்படையாக கதையை கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் , திடீரென்று , அமைச்சர் துரைமுருகனை நேரடியாக சுட்டிகாமித்து தனது குட்டி ஸ்டோரியை தொடர்ந்தார் .

அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். கலைஞர் ஒரு விஷயத்தை சொன்னால், அதற்கு அப்படியா! சந்தோஷம் என்று துரை முருகன் பதில் அளிப்பார். அவர் நன்றாக இருக்கிறது சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா? அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது ” என்று கூறி தனது குட்டி ஸ்டோரியை முடித்தார் .

ரஜினியின் குட்டி ஸ்டோரியை கேட்டு மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் தொடங்கி , அரங்கில் இருந்த அனைவரும் பலத்த சிரிப்பொலியை எழுப்பினர் .

ரஜினிகாந்தை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் , நடிகர் ரஜினிகாந்த் என்னோடு வயதில் மூத்தவர் , அவர் கூற வரும் அறிவுரை எனக்கு புரிகிறது , எனினும் நீங்கள் பயப்படவேண்டாம் அதற்கு எல்லாம் நான் இடம் தர மாட்டேன் என்று பேசி விழாவினை நிறைவு செய்து வைத்தார் .

விழா முடிவில் , ரஜினிகாந்த் தங்களை சுட்டி காட்டி சொன்ன கதைக்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து நடிக்கிறதுனாலதான் இளைய நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது ” என ரஜினியின் ஸ்டோரிக்கு தனது பாணியில் அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்தார் .

அமைச்சர் துரைமுருகன்

கடந்த இரண்டு நாட்களாக , நடிகர் ரஜினி மீது அதிமுகவின் கே பி முனுசாமி , பாஜக வின் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் , மூத்த அரசியல்வாதியான துரைமுருகனை ரஜினி நாகரிகமற்ற வகையில் பேசியுள்ளார் என்ற வெறுப்பு பிரச்சாரத்தை செய்தனர் .

இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு முடிவுக்கட்டும் வகையில் இன்று படப்பிடிப்பு ஒன்றிற்காக விஜயவாடா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் , செய்தியாளர்களை சந்தித்து ” அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்களுடைய நட்பு எப்பொழுதும் தொடரும்” என்றார்.

ரஜினிகாந்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் ” எங்கள்நகைச் சுவையை பகைச்சுவையாக யாரும் பயன்படுத்த வேண்டாம்; நானும் ரஜினியும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/madurai-meenakshi-amman-temple-staffs-stopped-us-asking-for-evidence-related-to-religion-and-caste-acctress-namitha/

மேலும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share This Article

Leave a Reply