காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி உயிரிழந்த சம்பவம்.

2 Min Read
விவசாயி நவீன்

தர்மபுரி பகுதியில் கட்டுப்பன்றியிடம் இருந்து தான் பயிரிட்டிருந்த விளைநிலத்தை பாதுகாப்பதற்காக  தான் அமைத்த மின் வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மக்கள் தொகை பெருக்கத்தால் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் கட்டுமானங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து சுருங்கி கொண்டே செல்கிறது.  இதற்கிடையே காடுகளை ஒட்டிய நிலப்பகுதிகள் விளை நிலங்களாக மாறி வருவதால் தொடர்ச்சியாக காட்டு விலங்குகள் விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் மின்வேலி அமைப்பதால் அதில் சிக்கி விலங்குகள் பலியாகின்றன. இந்நிலையில் தர்மபுரி அருகே விவசாயி ஒருவர் தான் அமைத்த மின்வேலியில் சிக்கி தானே உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி அருகில்  சூடானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனி ராஜ். இவருடைய மகன் நவீன் .30  வயதுதான  விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். திருமணமாகாத இவருக்கு, கிராமத்தின் அருகே வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. அந்த வயலில் தந்தையும் மகனும் இணைந்து நெல் பயிரிட்டிருந்தனர்.

மின்வேலி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிபன்றிகள் தங்களது விலை நிலத்திற்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்ட காரணத்தினால் நெற்பயிரை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க தந்தை, மகன் இருவரும் சேர்ந்து வயலை சுற்றி மின்வேலி அமைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல நவீன் வயலுக்கு சென்றார். அங்கு தான் அமைத்த மின்வேலி கம்பியை  தெரியாமல் அவர் மிதித்ததில், நவீன் மீது மின்சாரம் பாய்ந்தது.

அவ்வழியாக சென்றவர்கள் நவீன் மின் வேலியில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பஞ்சப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த கோர விபத்தில் பலத்த காயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்திற்க்கு வந்த பஞ்சபள்ளி காவல் துறையினர் மின்சாரத்தை துண்டித்து உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காட்டுப்பன்றியிடமிருந்து தான் பயிரிட்டு இருந்த நெற்பயிரை காக்க, தான் அமைத்த மின்வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply