வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

1 Min Read
வானதி சீனிவாசன்

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், “கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி. இம்மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை தரிசித்து வருகின்றனர்.

வானதி சீனிவாசன்

தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே பக்த்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை எற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply