Exclusive : திருவள்ளுவர் அருகே இயற்கை வளங்களை அழித்து நடத்தப்படும் மணல் கொள்ளை , தட்டிக்கேட்கும் மக்களுக்கு கொலை மிரட்டல் . !

2 Min Read
திருவள்ளூர் அருகே சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரி

திருவள்ளூர் அருகே சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரி – இதனை தட்டி கேட்கும் ஊர் பொதுமக்களுக்கு மணல் குவாரியின் நிர்வாகிகள் தங்கள் பின்னாடி ஆளுங்கட்சியின் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய செயலாளரின் உள்ளதாக கூறி மிரட்டுவதாக பகீர் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர் , இது குறித்து வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுவதாக முதியவர் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில் அரசு சவுடு மண் குவாரி கடந்த ஒரு மாத காலமாக செயல்பட்டு வருகிறது . இந்த மணல் குவாரி சம்மந்தமாக பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தற்போது பூதாகரமாகியுள்ளது .

காவல் துறைக்கு புகார் அளித்தால் கொலை மிரட்டல்

சில வாரங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து மணல் குவாரி , சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக கூறி நிறுத்திய சில மணிநேரங்களில் மீண்டும் மண் அள்ளிய சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, இந்நிலையில் அந்த மணல் குவாரியில் குத்தகைக்காரர்கள் , தற்போது அரசு நிர்ணயித்த இடங்களை தாண்டி கிராம மக்களின் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதாக மேலும் புகார்கள் எழுந்து உள்ளது.

ஏரி பகுதியில் வயல்வெளிக்கு மின்சாரம் செல்லும் மின்கம்பத்தின் ஓரங்களில் பெரிய பெரிய குழிகளை வெட்டி மண் அள்ளுவதால் மின்கம்பம் சாயும் அவல நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர், குறிப்பாக சட்டத்துக்குப் புறம்பாக மண் அள்ளுவதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் , அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதில்லை என்று கூறும் முதியவர் ஒருவர், இந்த மணல் குவாரியில் காலை நான்கு மணி முதல் மண் அள்ளும் பணி தொடங்கப்பெறுவதாக தெரிவித்துள்ளார் .

இரவு பகல் பாராமல் நடத்தப்படும் மால் கொள்ளை

இது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினால் , மண்குவாரி உரிமையாளர்கள் தங்கள் பின்னாடி ஆளுங்கட்சியின் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய செயலாளர் உள்ளதாக மிரட்டுவதால் அதிகாரிகள் வர அச்சப்படுவதாக அந்த முதியவர் தெரிவிக்கிறார் . கிராம மக்களை மணல் குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

இது ஒருபுறம் இருக்க, சட்ட விரோத மணல் குவாரிக்கு எதிராக செயல்படும் கிராம மக்களை இரவு நேரங்களில் செல்லும்போது ரவுடிகளை வைத்து அடித்து தாக்குவதாகவும் , முதியவர் ஒருவர் பேசிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

யூடியூப்

இந்த வீடியோ தற்போது வைரலாகி திருவள்ளூர் மாவட்டத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது . சம்பந்தப்பட்ட மண்குவாரியில் அனுமதித்த அளவைவிட நான்கு மடங்கு மணல் அல்ல படுவதாகவும் , விவசாயிகளுக்கு சிறப்பான ஆட்சி என்று கூறும் தமிழக முதல்வரின் நிலை இதுதான் என முதியோர் கூறும் வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply