தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியக்குடி மேலத்தோப்பில். செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான கடையால் தொடர்ந்து விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருவதுடன் மாணவ மாணவியர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இளைஞர்கள் மதுக்கு அடிமையாகி இளம் பெண்கள் விதவைகளாக உருவாகி வருகின்றனர்

எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பாக மதுக்கடையை உடனடியாக அகற்ற கோரி தாலி கயிறுடன் ஏராளமான பெண்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகவும். கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் குடிப்பதால் குடும்பத்தின் வருமானம் குறைந்து வருவதாகவும். இளைஞர்கள் குடிக்க அடிமையாகி வருவதாகவும். இதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் தீ குளிப்போம் என தெரிவித்துள்ளதால் அ ந்த பகுதி முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.